ADDED : பிப் 13, 2024 09:09 PM

கோல்கட்டா: புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி 38-36 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வென்றது.
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. 'டாப்-6' அணிகள் அரையிறுதி 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் ஜெய்ப்பூர், புனே, டில்லி, குஜராத் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.
தமிழ் தலைவாஸ் அணி 20 போட்டியில் 45 புள்ளி மட்டும் (8 வெற்றி, 12 தோல்வி), அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. நேற்று கோல்கட்டாவில் நடந்த போட்டியில் பாட்னா, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 22-20 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் பாட்னா அணி எழுச்சி பெற்று, முந்தியது. இருப்பினும் இரு அணியும் மாறி மாறி புள்ளி எடுத்தன. முடிவில் பாட்னா அணி 38-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.