தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: அரையிறுதியில் புனே

புரோ கபடி: அரையிறுதியில் புனே

புரோ கபடி: அரையிறுதியில் புனே


UPDATED : பிப் 21, 2024 10:56 PM

ADDED : பிப் 21, 2024 10:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2024 10:56 PM ADDED : பிப் 21, 2024 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஞ்ச்குலா: புரோ கபடி லீக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது புனே அணி.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நேற்று ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடந்த லீக் போட்டியில் புனே, உ.பி., அணிகள் மோதின. முதல் பாதியில் உ.பி., அணி 28-15 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற புனே அணி, 40-38 என வெற்றி பெற்றது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ஹரியானா, பெங்களூரு அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் 24-24 என சம நிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் அசத்திய பெங்களூரு 53-39 என வெற்றி பெற்றது.

லீக் சுற்று முடிவில் முதல் இரு இடம் பெற்ற புனே (96), ஜெய்ப்பூர் (92) அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. அடுத்த நான்கு இடம் பெற்ற டில்லி (79), குஜராத் (70), ஹரியானா (70), பாட்னா (69) அணிகள் அரையிறுதி 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இம்முறையும் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் பங்கேற்ற 22 போட்டியில் 9 வெற்றி மட்டும் பெற்று (13 தோல்வி), 51 புள்ளியுடன் 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us