தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: புனே அணி அபாரம்

புரோ கபடி: புனே அணி அபாரம்

புரோ கபடி: புனே அணி அபாரம்


UPDATED : நவ 04, 2024 10:44 PM

ADDED : நவ 04, 2024 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2024 10:44 PM ADDED : நவ 04, 2024 09:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய புனே அணி 49-30 என குஜராத் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் புனே, குஜராத் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து அபாரமாக ஆடிய புனே அணியினர், குஜராத் வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் புனே அணி 30-9 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட குஜராத் அணிக்கு 21 புள்ளி கிடைத்தது. புனே அணி 19 புள்ளி பெற்றது. ஆட்டநேர முடிவில் புனே அணி 49-30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. புனே அணிக்கு ஆகாஷ் ஷிண்டே (11 புள்ளி), கேப்டன் பங்கஜ் மோகித் (8), அபினேஷ் (5), மோகித் கோயத் (5), கவுரவ் காத்ரி (5) கைகொடுத்தனர். குஜராத் சார்பில் குமன் சிங் 12, ஹிமான்ஷு சிங் 5 புள்ளி பெற்றனர்.

தமிழ் தலைவாஸ் தோல்விமற்றொரு லிீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி 32-36 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us