ADDED : நவ 24, 2024 11:16 PM

நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய புனே அணி 51-34 என பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி., மாநிலம் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் புனே, பெங்கால் அணிகள் மோதின. பெங்கால் வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்த புனே அணி, முதல் பாதி முடிவில் 24-11 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் ஓரளவு எழுச்சி கண்ட பெங்கால் அணிக்கு 23 புள்ளி கிடைத்தது. மீண்டும் அசத்திய புனே அணி 27 புள்ளி பெற்றது.
ஆட்டநேர முடிவில் புனே அணி 51-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. புனே அணிக்கு ஆகாஷ் ஷிண்டே (9 புள்ளி), மோகித் கோயத் (9), கேப்டன் பங்கஜ் மோகித் (6) கைகொடுத்தனர். பெங்கால் அணி சார்பில் நிதின் குமார் 13 புள்ளி பெற்றார்.
புனே அணி, 12 போட்டியில், 6 வெற்றி, 3 'டை', 3 தோல்வி என 42 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. பெங்கால் அணி 24 புள்ளிகளுடன் (3 வெற்றி, 2 'டை', 7 தோல்வி) 10வது இடத்தில் உள்ளது.

