தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் ஏமாற்றம்


ADDED : நவ 17, 2024 10:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 10:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி 29-36 என ஹரியானாவிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. உ.பி.,யின் நொய்டாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், ஹரியானா அணிகள் மோதின. ஹரியானா வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த தமிழ் தலைவாஸ் அணி, முதல் பாதி முடிவில் 17-14 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணிக்கு 12 புள்ளி மட்டும் கிடைத்தது. ஹரியானா அணி 22 புள்ளி பெற்றது.

ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 29-36 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு மொயின் ஷபாகி (7 புள்ளி), கேப்டன் நரேந்தர் (4) கைகொடுத்தனர். ஹரியானா சார்பில் வினய் 10, ஷிவம் 6 புள்ளி பெற்றனர்.

தமிழ் தலைவாஸ் அணி 11 போட்டியில், 4 வெற்றி, ஒரு 'டை', 6 தோல்வி என 28 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஹரியானா அணி முதலிடத்தில் (41 புள்ளி) நீடிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us