/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் தோல்வி
/
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் தோல்வி
ADDED : பிப் 04, 2024 10:48 PM

டில்லி: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 30-42 என குஜராத்திடம் தோல்வியடைந்தது.
இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் குஜராத், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. தமிழ் தலைவாஸ் அணிக்கு நரேந்தர் முதல் புள்ளி பெற்றுத்தந்தார். அபாரமாக ஆடிய குஜராத் அணியினர், தமிழ் தலைவாஸ் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 13-18 என பின்தங்கி இருந்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி 24 புள்ளி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு 17 புள்ளி மட்டும் கிடைத்தது. ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 30-42 என்ற கணக்கில் 11வது தோல்வியை பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு நரேந்தர் (9 புள்ளி) ஆறுதல் தந்தார். குஜராத் அணிக்கு ராகேஷ் (14 புள்ளி) கைகொடுத்தார்.
மற்றொரு லீக் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 42-37 என வெற்றி பெற்றது.