தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: தமிழ் தலைவாஸ் தோல்வி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் தோல்வி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் தோல்வி


ADDED : பிப் 11, 2024 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2024 10:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டா: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 29-56 என புனேயிடம் வீழ்ந்தது.

இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்ற புனே அணியை சந்தித்தது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய புனே அணியினர், தமிழ் தலைவாஸ் வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 10-28 என பின்தங்கி இருந்தது.

இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியினரால் எழுச்சி பெற முடியவில்லை. ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 29-56 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இது, தமிழ் தலைவாஸ் அணியின் 12வது தோல்வியானது. தமிழ் தலைவாஸ் அணிக்கு முகமதுரேசா (6 புள்ளி), ஹிமான்ஷு நார்வல் (5) ஆறுதல் தந்தனர். புனே அணிக்கு பங்கஜ் மோகித் (12) கைகொடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us