தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: உ.பி., அணி வெற்றி

புரோ கபடி: உ.பி., அணி வெற்றி

புரோ கபடி: உ.பி., அணி வெற்றி


ADDED : செப் 25, 2025 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய உ.பி., அணி, பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், பெங்கால் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

லீக் போட்டியில் பெங்களூரு, உ.பி., அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 20-19 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட உ.பி., அணியினர், பெங்களூரு வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர்.

விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 36-36 என சமநிலையில் இருந்தது. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அசத்திய உ.பி., அணி 6-5 என வெற்றி பெற்றது.

மற்றொரு லீக் போட்டியில் டில்லி அணி 47-26 என, மும்பை அணியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us