/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ லீக் ஹாக்கி: இந்தியா தோல்வி
/
புரோ லீக் ஹாக்கி: இந்தியா தோல்வி
ADDED : மே 26, 2024 09:27 PM

ஆன்ட்வெர்ப்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-3 என அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 5வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மீண்டும் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அர்ஜென்டினா சார்பில் சிலினா டி சான்டோ (முதல் நிமிடம்), மரியா காம்பாய் (39வது), மரியா கிரானாட்டோ (47வது) தலா ஒரு கோல் அடித்தனர். சமீபத்தில் அர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 0-5 என தோல்வியடைந்தது.
இதுவரை விளையாடிய 12 போட்டியில், 3 வெற்றி, 9 தோல்வி என 8 புள்ளிகளுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. அடுத்து லண்டன் செல்லும் இந்திய அணி, ஜெர்மனி (ஜூன் 1, 8), பிரிட்டன் (ஜூன் 2, 9) அணிகளுடன் விளையாடுகிறது.