தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புரோ கபடி: ஐதராபாத் அபாரம்

புரோ கபடி: ஐதராபாத் அபாரம்

புரோ கபடி: ஐதராபாத் அபாரம்


UPDATED : அக் 18, 2024 10:53 PM

ADDED : அக் 17, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2024 10:53 PM ADDED : அக் 17, 2024 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் ஐதராபாத் அணி, 37--29 என, பெங்களூருவை வென்றது.

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11 வது சீசன் நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் (ஐதராபாத்) அணிகள் மோதின. போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் ஐதராபாத் 3-1 என முந்தியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ஐதராபாத் அணி முதல் பாதியில் 9 புள்ளி முன்னிலை (20-11) பெற்றது.

இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி அடுத்தடுத்து புள்ளிகள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 23-24 என ஐதராபாத்தை நெருங்கியது. பின் பெங்களூரு ஆல் அவுட்டாக, ஐதாரபாத் 28-23 என முன்னேறியது.

முடிவில் சொந்தமண்ணில் களமிறங்கிய ஐதராபாத் அணி 37-29 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐதராபாத் அணி கேப்டன் பவன் ஷெராவத் அதிகபட்சம் 13 புள்ளி எடுத்தார். தவிர, புரோ கபடி அரங்கில் 1200 ரெய்டு புள்ளி என்ற மைல்கல்லை எட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us