தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி: பாட்னா 'திரில்' வெற்றி

கபடி: பாட்னா 'திரில்' வெற்றி

கபடி: பாட்னா 'திரில்' வெற்றி


ADDED : செப் 20, 2025 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி, 3 புள்ளி வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி தபாங், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்ட டில்லி அணி 19-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் பாட்னா அணி ஒரு கட்டத்தில் 26-29 என டில்லியை நெருங்கியது. கடைசி நிமிடத்தில் எழுச்சி பெற்ற பாட்னா அணி 33-30 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. பாட்னா சார்பில் அங்கித் குமார் 12, கேப்டன் அங்கித் 6 புள்ளி எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.

நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ், ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 16-25 என பின் தங்கியது.

இரண்டாவது பாதி துவக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணியினர் அடுத்தடுத்து புள்ளிகள் எடுத்தனர். இருப்பினும் ஹரியானா அணி 38-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அர்ஜுன் தேஸ்வல் அதிகபட்சம் 13 புள்ளி எடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us