
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: புரோ கபடி தொடரில் பாட்னா அணி 9வது தோல்வியை பதிவு செய்தது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று, டில்லியில் நடந்த லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், ஹரியானா அணிகள் மோதின. முதல் பாதியில் பாட்னா அணி 20-14 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற ஹரியானா அணி அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தது. முடிவில் பாட்னா அணி 32-39 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.