தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தமிழ் தலைவாஸ் 'திரில்' வெற்றி

தமிழ் தலைவாஸ் 'திரில்' வெற்றி

தமிழ் தலைவாஸ் 'திரில்' வெற்றி


ADDED : ஆக 29, 2025 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விசாகப்பட்டனம்: விசாகப்பட்டனத்தில் புரோ கபடி லீக் 12வது சீசன் நேற்று துவங்கியது. 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, தமிழ் தலைவாஸ், பாட்னா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் சுற்றில் மோதுகின்றன. நேற்று நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 14-13 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி துவங்கிய சில நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் ஆல் அவுட்டாக, 14-19 என பின் தங்கியது. அடுத்து எழுச்சி பெற்ற தமிழ் தலைவாஸ் அணியினர் அடுத்தடுத்து புள்ளி எடுத்தனர்.

போட்டி முடிய 3 நிமிடம் இருந்த போது, தெலுங்கு டைட்டன்சை ஆல் அவுட்டாக்கி பதிலடி தர, தமிழ் தலைவாஸ் 31-29 என முன்னிலை பெற்றது. முடிவில் 38-35 என 'திரில்' வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் சார்பில் அர்ஜுன் தேஸ்வல் அதிகபட்சம் 12, கேப்டன் பவன் ஷெராவத் 9 புள்ளி எடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us