தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தமிழ் தலைவாஸ் வெற்றி * புரோ கபடி லீக் தொடரில்...

தமிழ் தலைவாஸ் வெற்றி * புரோ கபடி லீக் தொடரில்...

தமிழ் தலைவாஸ் வெற்றி * புரோ கபடி லீக் தொடரில்...


UPDATED : நவ 26, 2024 11:08 PM

ADDED : நவ 26, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2024 11:08 PM ADDED : நவ 26, 2024 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா: புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 40-26 என்ற கணக்கில் உ.பி., அணியை வீழ்த்தியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நொய்டாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், உ.பி., யோதாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டி துவங்கிய 6 வது நிமிடம் 6-1 என தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை பெற்றது. பின் உ.பி., அணி சிறப்பாக செயல்பட, 15-11 என முந்தியது.

அடுத்து உ.பி., அணியை 'ஆல் அவுட்' செய்த தமிழ் தலைவாஸ் அணி, கடைசி 10 நிமிடம் இருந்த போது 25-19 என மீண்டும் முன்னிலை பெற்றது. முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 40-26 என்ற கணக்கில் கலக்கல் வெற்றி பெற்றது.

தமிழ் தலைவாஸ் அணி 13 போட்டியில் 5 வெற்றி, 1 'டை', 7 தோல்வியுடன் 33 புள்ளி எடுத்து, பட்டியலில் 9வதாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us