தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பெங்களூருவை வீழ்த்தியது புனே: புரோ கபடியில் கலக்கல்

பெங்களூருவை வீழ்த்தியது புனே: புரோ கபடியில் கலக்கல்

பெங்களூருவை வீழ்த்தியது புனே: புரோ கபடியில் கலக்கல்


UPDATED : பிப் 08, 2024 12:01 PM

ADDED : பிப் 07, 2024 09:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2024 12:01 PM ADDED : பிப் 07, 2024 09:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: புரோ கபடி லீக் போட்டியில் புனே அணி 40-31 என பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, புனே அணிகள் மோதின. ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்த புனே அணிக்கு அஸ்லாம் முஸ்தபா இனாம்தர் முதல் புள்ளி பெற்றுத்தந்தார். பெங்களூரு அணிக்கு சுஷில், ரான் சிங் ஆறுதல் தந்தனர். ஆகாஷ் ஷிண்டே, மோகித் கோயத் கைகொடுக்க முதல் பாதி முடிவில் புனே அணி 18-13 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய புனே அணியினர், பெங்களூரு வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். ஆட்டநேர முடிவில் புனே அணி 40-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது, புனே அணியின் 13வது வெற்றியானது. புனே அணிக்கு கேப்டன் அஸ்லாம் முஸ்தபா (11) கைகொடுத்தார். பெங்களூரு அணிக்கு சுஷில் (9) ஆறுதல் தந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us