sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ரியல் மாட்ரிட் ஆதிக்கம்

/

ரியல் மாட்ரிட் ஆதிக்கம்

ரியல் மாட்ரிட் ஆதிக்கம்

ரியல் மாட்ரிட் ஆதிக்கம்


ADDED : மார் 12, 2026 09:36 PM

Google News

ADDED : மார் 12, 2026 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடருக்கான 'ரவுண்டு-16' சுற்றுக்கான முதல் போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

காலிறுதியில் ஸ்வியாடெக்

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடக்கும் டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ், ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-0 என, செக்குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 என, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை தோற்கடித்தார்.

எக்ஸ்டிராஸ்

* கொல்கட்டாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 6-1, 3-6, 6-1 என, சகவீரர் தேவ் ஜாவியாவை வீழ்த்தினார்.

* அடிலெய்டில், பெண்களுக்கான ஆஸ்திரேலிய ஓபன் கோல்ப் தொடர் நடக்கிறது. முதல் சுற்றின் முடிவில் இந்தியாவின் திக் ஷா தாகர், வாணி கபூர் தலா 72 புள்ளிகளுடன் 24வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

* மியான்மரில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து முதல் போட்டியில் (17 வயது), இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் மியான்மர் அணியை வென்றது. இரண்டாவது போட்டி நாளை நடக்கவுள்ளது






      Dinamalar
      Follow us