sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ரியல் மாட்ரிட் 'டிரா'

ரியல் மாட்ரிட் 'டிரா'

ரியல் மாட்ரிட் 'டிரா'


ADDED : ஏப் 25, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 07:52 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாட்ரிட்: ஸ்பெயினில், லா லிகா கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ரியல் பெடிஸ், ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி, ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதுவரை விளையாடிய 33 போட்டியில், 23 வெற்றி, 5 'டிரா', 5 தோல்வி என, 74 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி 2வது இடத்தில் உள்ளது. முன்னணி வீரர்களான அர்தா குலர், எடர் மிலிட்டாவோ, காயத்தால் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியது, ரியல் மாட்ரிட் அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

பென்சிக் முன்னேற்றம்

மாட்ரிட்: ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் மோதினர். இதில் பென்சிக் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-4, 6-4 என, பிரிட்டனின் கேட்டி பவுல்டரை வீழ்த்தினார்.

எக்ஸ்டிராஸ்

* இந்திய ஹாக்கி ஜாம்பவான் குர்பாக்ஸ் சிங் கிரேவால் 84. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், மெக்சிகோ ஒலிம்பிக்கில் (1968) வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஓய்வுக்கு பின், மும்பை ஹாக்கி சங்கத்தின் செயலராக இருந்தார். நேற்று, மாரடைப்பால் காலமானார்.

* பெங்களூருவில் நடந்த பெங்களூரு, மும்பை அணிகளுக்கு இடையிலான ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

* கோவாவில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 7வது சீசன் (ஜூலை 9-26) நடக்கவுள்ளது. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம், ஏப். 28ல் மும்பையில் நடக்கிறது. இந்தியாவின் சத்யன் (டில்லி), மணிகா பத்ரா (ஆமதாபாத்), ஆகாஷ் பால் (மும்பை) உள்ளிட்டோர் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டனர்.

* சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடக்கும் கிராஸ்ஹாப்பர் கோப்பை ஸ்குவாஷ் காலிறுதியில் இந்தியாவின் அபே சிங் 0-2 (10-12, 9-11) என்ற கணக்கில் எகிப்தின் கரீம் கவாத்திடம் தோல்வியடைந்தார்.

* பெங்களூருவில், 'வேர்ல்டு 10கே' ஓட்டம் இன்று நடக்கிறது. நடப்பு சாம்பியன்களான உகாண்டாவின் சாரா செலங்கட், ஹார்பர்ட் கிபெட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us