டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
UPDATED : அக் 18, 2026 03:33 PM
ADDED : அக் 17, 2026 11:18 PM
UPDATED : அக் 18, 2026 03:33 PM ADDED : அக் 17, 2026 11:18 PM
ஓடென்ஸ்: டென்மார்க்கில், 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சி, சீனாவின் ஜி யி வாங் மோதினர். இதில் யமாகுச்சி 21-10, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவின் ஆன் சே யங் 21-16, 21-8 என, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்தார்.ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்விஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா மோதினர். இரண்டு மணி நேரம், 2 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஸ்வெரேவ் 7-5, 4-6, 3-6 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் 3-6, 4-6 என, ஸ்பெயினின் ரபெல் ஜோடாரிடம் வீழ்ந்தார்.