ADDED : நவ 23, 2026 09:57 PM

மான்செஸ்டர் யுனைடெட் அதிர்ச்சி
லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 0–4 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 11 போட்டியில், 6 வெற்றி, 3 ‘டிரா’, 2 தோல்வி என 21 புள்ளிகளுடன் லிவர்பூல் அணி 4வது இடத்துக்கு முன்னேறியது. ஐந்தாவது தோல்வியை பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி, 8 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளது.
பார்சிலோனா அணி முதலிடம்
மாட்ரிட்: ஸ்பெயினில், ‘லா லிகா’ கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில், பார்சிலோனா, வில்லாரியல் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணி 3–2 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2–1 என, செல்டா விகோ அணியை வென்றது. இதுவரை விளையாடிய 13 போட்டியில், 12ல் வென்ற பார்சிலோனா அணி 36 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் ரியல் மாட்ரிட் அணி 33 புள்ளிகளுடன் உள்ளது.
சின்சினாட்டி அணி வெற்றி
நியூயார்க்: அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் நாஷ்வில்லே, சின்சினாட்டி அணிகள் மோதின. இதில் சின்சினாட்டி அணி 1–0 என வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் சிகாகோ அணி 1–2 என, சார்லோட்டி அணியிடம் தோல்வியடைந்தது. வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 2–0 என, ரியல் சால்ட் லேக் அணியை வென்றது.
