தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கோப்பை வென்றார் ரிபாகினா

கோப்பை வென்றார் ரிபாகினா

கோப்பை வென்றார் ரிபாகினா


ADDED : ஏப் 19, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 09:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டட்கர்ட்: ஜெர்மனியில் நடந்த டபிள்யு.டி.ஏ., கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் பைனலில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, செக்குடியரசின் கரோலினா முசோவா மோதினர். இதில் ரிபாகினா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (2024, 2026) கோப்பை வென்றார். இது, இவரது 13வது டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பட்டம்.

ரியல் சோசிடாட் 'சாம்பியன்'

செவில்லே: ஸ்பெயினில், 'கோபா டெல் ரே' கால்பந்து 124வது சீசன் நடந்தது. இதன் பைனலில் ரியல் சோசிடாட், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி, ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய ரியல் சோசிடாட் அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, 3வது முறையாக (1986-87, 2019-20, 2025-26) சாம்பியன் ஆனது.

செல்சி அணி தோல்வி

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் செல்சி, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. குன்ஹா ஒரு கோல் அடித்து கைகொடுக்க மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 33 போட்டியில், 16 வெற்றி, 10 'டிரா', 7 தோல்வி என, 58 புள்ளிகளுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3வது இடத்தில் உள்ளது. முதலிரண்டு இடங்களில் ஆர்சனல் (70 புள்ளி), மான்செஸ்டர் சிட்டி (64) அணிகள் நீடிக்கின்றன.

எக்ஸ்டிராஸ்

* தென் கொரியாவில் நடந்த ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், ஜப்பானின் டகேரு யுசுகி ஜோடி 4-6, 6-3, 10-7 என, நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர், அமெரிக்காவின் தியோடோர் வினேகர் ஜோடியை வீழ்த்தியது. இது, அனிருத் கைப்பற்றிய 10வது ஏ.டி.பி., சேலஞ்சர் பட்டம்.

* கோவாவில் நடந்த இந்திய கால்பந்து லீக் போட்டியில் ராஜஸ்தான் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெம்போ அணியை வீழ்த்தியது.

* ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (மே 28 - மே 31, ஹாங்காங்) போட்டிக்கான தகுதிச் சுற்று, வரும் ஏப். 24-26ல் கர்நாடகாவின் தும்கூர் நகரில் நடக்கவுள்ளது.

* இந்திய பாராலிம்பிக் கமிட்டி, சுமித் அன்டில் புகார் தெரிவித்த ஈட்டி எறிதல் பயிற்சியாளர் நாவல் சிங்கை பதவியில் இருந்து உடனடியாக நீக்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us