sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

நான்காவது சுற்றில் சபலென்கா

/

நான்காவது சுற்றில் சபலென்கா

நான்காவது சுற்றில் சபலென்கா

நான்காவது சுற்றில் சபலென்கா


ADDED : மார் 09, 2026 09:55 PM

Google News

ADDED : மார் 09, 2026 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் 3வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா 6-4, 6-1 என ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் (2-6, 0-2) பாதியில் விலக, பிலிப்பைன்ஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஈலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

சபாஷ் ரஷ்யா

மிலன்: இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான பாரா ஆல்பைன் பனிச்சறுக்கு 'சூப்பர்-ஜி' ('ஸ்டேன்டிங்') பிரிவில் இலக்கை ஒரு நிமிடம், 15.60 வினாடியில் கடந்த ரஷ்யாவின் வர்வரா வோரோஞ்சிகினா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். குளிர்கால பாராலிம்பிக் வரலாற்றில், 12 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது.

எக்ஸ்டிராஸ்

* ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதுகின்றன. முதலிரண்டு போட்டியில் வியட்நாம், ஜப்பானிடம் தோல்வியடைந்த இந்தியா, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

* டில்லியில், தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிப்போட்டி நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிசன்ஸ்' பிரிவில் இந்தியாவின் திலோத்தமா சென், 357.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஆண்கள் பிரிவில் கிரண் அங்குஷ் ஜாதவ் முதலிடம். ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் உதய்வீர் சித்து முதலிடத்தை தட்டிச் சென்றார்.

* தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கும் உலக குத்துச்சண்டை பியூட்சர்ஸ் கோப்பை முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ராதாமணி லாங்ஜாம் (57 கிலோ) வெற்றி பெற்றார். ஆண்களுக்கான 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சாஹில் துஹான் வென்றார்.






      Dinamalar
      Follow us