தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சாதிப்பாரா பிரக்ஞானந்தா * கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்...

சாதிப்பாரா பிரக்ஞானந்தா * கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்...

சாதிப்பாரா பிரக்ஞானந்தா * கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்...


ADDED : ஏப் 02, 2024 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2024 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டொரன்டோ: உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வீரரை தேர்வு செய்யும், கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் இன்று துவங்குகிறது. இந்திய வீரர் பிரக்ஞானந்தா மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் 'கேண்டிடேட்ஸ்' தொடர் இன்று கனடாவின் டொரன்டோவில் துவங்குகிறது. உலகின் பல்வேறு தொடரில் சாதித்த 'டாப்-8' வீரர்கள் இதில் களமிறங்குகின்றனர். ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோதுவர். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்று சாம்பியன் ஆகும் வீரர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற, நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுடன் 31, மோதலாம்.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இரண்டாவது இடம் பெற்ற பிரக்ஞானந்தா 18, கிராண்ட் சுவிஸ் தொடர் சாம்பியன் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி 29, 'பிடே சர்க்யூட்' தொடரில் வென்ற குகேஷ் 17, என மொத்தம் பங்கேற்கும் 8 பேரில் 3 இந்திய வீரர்கள் இதில் களமிறங்குவது கூடுதல் ஸ்பெஷல்.

இதில் பிரக்ஞானந்தா மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மனதளவில் வலிமையாகவும் கடைசி வரை துணிச்சலாக போராடும் இவருக்கு, ரஷ்ய தொடரில் எட்டுமுறை சாம்பியனான பீட்டர் சிவில்டர் 47, உதவியாக உள்ளார்.

இத்தொடரில் களமிறங்கும் இளம் வீரர் குகேஷ். இவர் சாதித்தால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இளம் வீரர் ஆகலாம். விதித்தை பொறுத்தவரையில் 'பார்ம்' இல்லாமல் தவிப்பது பலவீனம்.

ஹம்பி நம்பிக்கை

'கேண்டிடேட்ஸ்' தொடரில் முதன் முறையாக பெண்கள் போட்டியும் இணைந்து நடத்தப்படுகிறது. இந்தியாவின் வைஷாலி, கோனேரு ஹம்பி உட்பட 8 வீராங்கனைகள் இதில் களமிறங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us