தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சஹாஜா ஜோடி அசத்தல்

சஹாஜா ஜோடி அசத்தல்

சஹாஜா ஜோடி அசத்தல்


UPDATED : அக் 10, 2026 11:19 PM

ADDED : அக் 10, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 11:19 PM ADDED : அக் 10, 2026 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லெக்சிங்டன்: லெக்சிங்டன் டென்னிஸ் தொடரில் சஹாஜா ஜோடி சாம்பியன் ஆனது.

அமெரிக்காவின் லெக்சிங்டனில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சஹாஜா, மொராக்கோவின் எல் ஜார்டி ஜோடி, உக்ரைனின் வலேரியா, தலாய்னா ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை சஹாஜா ஜோடி 2–6 என இழந்தது. பின் அடுத்த செட்டை 7–5 என போராடி கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி ‘சூப்பர் டை பிரேக்கருக்கு’ சென்றது.

இதை சஹாஜா ஜோடி 12–10 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 45 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சஹாஜா ஜோடி, 2–6, 7–5, 12–10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us