உள்ளடக்கத்திற்கு செல்ல

தங்கம் வென்றார் அபர்ணா * உலக கோப்பை சாண்டா போட்டியில்
தங்கம் வென்றார் அபர்ணா * உலக கோப்பை சாண்டா போட்டியில்
ADDED : மே 14, 2026 10:48 PM

அ நிறம் | அளவு
மக்காவ்: சீன கட்டுப்பாட்டில் உள்ள மக்காவில், 11 வது 'சாண்டா' உலக கோப்பை நடக்கிறது. பாரம்பரிய உஷூ விளையாட்டில் இருந்து உருவான, நவீன, ஆயுதமற்ற தற்காப்பு கலை, 'சாண்டா' எனப்படுகிறது.
இதில் மல்யுத்தம், குத்துச்சண்டை, உதைத்தல் உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து விளையாடப்படுகிறது. இதில் இந்திய உஷூ வீராங்கனை அபர்ணா, 52 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். பைனலில் வியட்நாமின் தி புயோங் நிகோவை எதிர்கொண்டார்.
கடந்த 2025ல் பிரேசிலில் நடந்த உலக உஷூ சாம்பியன்ஷிப், பைனலில் அபர்ணா, தி புயோங்கிடம் தோற்று இருந்தார். இம்முறை துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய அபர்ணா, நேர் செட்டில் வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
