ADDED : ஏப் 10, 2025 10:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜியாங்யின்: சாண்டா உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு ஐந்து வெள்ளி கிடைத்தன.
சீனாவில் 10வது 'சாண்டா' (பாரம்பரிய கலை) உலக கோப்பை தொடர் நடந்தது. இந்தியா சார்பில் 6 பேர் பங்கேற்றனர். 75 கிலோ பிரிவில் முகேஷ் சவுத்ரி, தங்கம் வென்றார். பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சாவ்வி தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இந்திய வீரர்கள் குஷால் (48 கிலோ), ரவி பஞ்சால் (65), அனுஜ் குமார் (52), ரஜத் சராக் (85) தங்களது பிரிவுகளில் நடந்த பைனலில் தோல்வியடைய, வெள்ளி கிடைத்தன. இத்தொடரில் இந்தியா 1 தங்கம், 5 வெள்ளி என 6 பதக்கம் கைப்பற்றியது.

