/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சென்னை அணியில் சரத் கமல்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
/
சென்னை அணியில் சரத் கமல்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
சென்னை அணியில் சரத் கமல்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
சென்னை அணியில் சரத் கமல்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்
ADDED : ஜூன் 16, 2024 11:36 PM

புதுடில்லி: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடருக்கான சென்னை அணியில் சரத் கமல் தக்கவைக்கப்பட்டார்.
சென்னையில், அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 5வது சீசன் (ஆக. 22 - செப். 7) நடக்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த சீசனில் விளையாடிய 'நடப்பு சாம்பியன்' கோவா, சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை, புனே அணிகளுடன் ஜெய்ப்பூர், ஆமதாபாத் என இரண்டு புதிய அணிகள் அறிமுகமாகின்றன. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணியும், தலா ஒரு இந்திய வீரர்/வீராங்கனையை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன.
இதனையடுத்து சென்னை அணி சீனியர் வீரர் அஜந்தா சரத் கமலை தக்கவைத்துக் கொண்டது. பெங்களூரு அணியில் மணிகா பத்ரா நீடிக்கிறார். மற்ற இந்திய நட்சத்திரங்களான ஹர்மீத் தேசாய் (கோவா), சத்யன் ஞானசேகரன் (டில்லி), மானவ் தக்கர் (மும்பை) தக்கவைக்கப்பட்டனர். புனே அணி இன்னும் அறிவிக்கவில்லை.