ADDED : மார் 14, 2024 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சர்வதேச டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சரத் கமல் முன்னேறினார்.
சிங்கப்பூரில் சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் உலக தரவரிசையில் 88வது இடத்தில் உள்ள இந்தியாவின் அஜந்தா சரத் கமல், உலகின் 'நம்பர்-22' எகிப்தின் உமர் அசார் மோதினர். அபாரமாக ஆடிய சரத் கமல் 3-0 (11-4, 11-8, 12-10) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
பத்து முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சரத் கமல், காலிறுதியில் பிரான்சின் பெலிக்ஸ் லெப்ரனை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் பதக்க சுற்றுக்கு முன்னேறலாம்.

