தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/டேபிள் டென்னிஸ்: சத்யன் 'ஷாக்'

டேபிள் டென்னிஸ்: சத்யன் 'ஷாக்'

டேபிள் டென்னிஸ்: சத்யன் 'ஷாக்'


ADDED : மே 02, 2024 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2024 10:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெட்டா: சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சத்யன் தோல்வியடைந்தார்.

சவுதி அரேபியாவில் சர்வதேச 'சவுதி ஸ்மாஷ்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் சத்யன், சிங்கப்பூரின் இஜாக்கை சந்தித்தார். முதல் செட்டை (8-11) இழந்த சத்யன் அடுத்த செட்டை (11-8) கைப்பற்றினார்.

பின் ஏமாற்றிய இவர் அடுத்த இரு செட்டை (8-11, 11-13) இழந்தார். முடிவில் சத்யன் 1-3 என அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இந்தியாவின் ஹர்மீத் தேசாய், 3-0 என (18-16, 11-8, 12-10) இத்தாலியின் மிகாயை சாய்த்தார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் மானவ் விகாஷ் தக்கார், அல்ஜீரியாவின் மெஹதியை 3-2 என்ற (6-11, 11-8, 7-11, 11-3, 11-1) கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்தியாவின் ஸ்னேஹித் 3-1 என (9-11, 13-11, 11-5, 11-4) எகிப்தின் காலித்தை வீழ்த்தினார்.

சுதிர்த்தா வெற்றி

பெண்கள் தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சுதிர்த்தா முகர்ஜீ, மெக்சிகோவின் யாதிராவை சந்தித்தார். இதில் சுதிர்த்தா 3-0 என (11-8, 11-6, 11-3) என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் யாஷஸ்வினி, உக்ரைனின் மார்கரட்டாவை எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்த போதும், அடுத்த மூன்று செட்டுகளை வசப்படுத்திய யாஷஸ்வினி 3-1 என்ற (7-11, 11-7, 11-7, 11-9) கணக்கில் வெற்றி பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us