/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சவுரவ் கோஷல் 'குட் பை' * ஸ்குவாஷ் தொடரில் இருந்து...
/
சவுரவ் கோஷல் 'குட் பை' * ஸ்குவாஷ் தொடரில் இருந்து...
சவுரவ் கோஷல் 'குட் பை' * ஸ்குவாஷ் தொடரில் இருந்து...
சவுரவ் கோஷல் 'குட் பை' * ஸ்குவாஷ் தொடரில் இருந்து...
ADDED : ஏப் 22, 2024 10:53 PM

புதுடில்லி: சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இருந்து விடை பெற்றார் சவுரவ் கோஷல்.
இந்தியாவின் 'நம்பர்-1' ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் 37. உலக சாம்பியன்ஷிப் (2022) கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றவர். தவிர காமன்வெல்த் விளையாட்டு கலப்பு இரட்டையரில் 2018ல் வெள்ளி, 2022ல் வெண்கலம், தனிநபர் பிரிவில் வெண்கலம் கைப்பற்றியவர். சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் 500 போட்டிகளில் பங்கேற்ற இவர், 12 கோப்பை வென்றுள்ளார்.
தவிர ஆசிய விளையாட்டில் 2014, 2022ல் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2019, ஏப்., ல் உலகின் 'நம்பர்-10' வீரராக உயர்ந்தார். தற்போது 15 வது இடத்திலுள்ள சவுரவ் கோஷல், சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:
கடந்த 22 ஆண்டுக்கு முன் எனது பயணம் துவங்கியது. தொழில் ரீதியிலான தொடரில் இத்தனை ஆண்டுகள் நீடிப்பேன் என கனவில் கூட நினைத்தது இல்லை. இந்த விளையாட்டு தான் பல ஆண்டுகள் எனது வாழ்க்கையில் ஆதாரமாக, அடையாளமாக திகழ்ந்தது. இதற்கு முடிவே கிடையாது என நினைத்திருந்தேன். ஆனால் எதற்கும் ஒரு முடிவு உள்ளது. எனவே சோகம், பெருமிதத்துடன் சர்வதேச தொடரில் இருந்து விடைபெறுகிறேன். இருப்பினும் இன்னும் சில காலம் இந்தியாவுக்காக விளையாட முடியும் என நம்புகிறேன். ஏனெனில் எனது தேசத்திற்காக இன்னும் கொஞ்சம் சாதிக்க என்னால் முடியும், நன்றி.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

