/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பி.டி.உஷா சாதனையை தகர்த்த வித்யா * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
/
பி.டி.உஷா சாதனையை தகர்த்த வித்யா * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
பி.டி.உஷா சாதனையை தகர்த்த வித்யா * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
பி.டி.உஷா சாதனையை தகர்த்த வித்யா * தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில்...
ADDED : செப் 03, 2024 12:22 AM

பெங்களூரு: தேசிய தடகளம் 400 மீ., தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழகத்தின் வித்யா. 39 ஆண்டுகால பி.டி.உஷா சாதனையை தகர்த்தார்.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப், பெங்களூருவில் நடந்தது. பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்திற்கான பைனல் நேற்று நடந்தது. இதில் அசத்திய தமிழகத்தின் வித்யா ராம்ராஜ், 56.23 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
தவிர, தேசிய ஓபன் தடகளத்தில் இது புதிய சாதனையாக அமைந்தது. 39 ஆண்டுக்கு முன், 1985ல் திருவனந்தபுரத்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கேரளாவின் பி.டி.உஷா, 56.80 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து இருந்தார்.
நிதின் தங்கம்
ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் நிதின் (20.66 வினாடி) தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழக வீரர் முகமது, 16.28 மீ., துாரம் தாண்டி, தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் சதிஷ், சுராஜ், சின்தலா, விஷால் இடம் பெற்ற கூட்டணி, 3 நிமிடம், 08.56 வினாடி நேரத்தில் ஓடி, வெள்ளிப்பதக்கம் வென்றது.
ஆன்சி அபாரம்
பெண்களுக்கான நீளம் தாண்டுதல் நடந்தது. சர்வீசஸ் ஸ்போர்ட்ஸ் அணியின் ஆன்சி சோஜன், 6.71 மீ., துாரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தேசிய தடகள நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் (6.83 மீ.,), ஷைலி சிங்கிற்கு (6.76 மீ.,) பின் சிறந்த துாரமாக அமைந்தது.