/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செபக்தக்ரா: இந்தியா 2 வெண்கலம்
/
செபக்தக்ரா: இந்தியா 2 வெண்கலம்
ADDED : மார் 21, 2025 11:07 PM

பாட்னா: உலக கோப்பை செபக்தக்ராவில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம் கிடைத்தது.
பீஹாரில் உலக கோப்பை செபக்தக்ரா போட்டி நடக்கிறது. இந்திய ஆண்கள் அணி (4 வீரர்கள்), லீக் சுற்றில் நேற்று, தனது இரண்டு, மூன்றாவது போட்டியில் அமெரிக்கா (2-1), ஈரானை (2-1) வென்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, காலிறுதியில் சிங்கப்பூரை 2-1 என வீழ்த்தியது.
அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, வியட்நாம் மோதின. இதில் இந்திய அணி 1-2 (10-15, 17-15, 10-15) என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
பெண்களுக்கான அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-2 (17-15, 10-15, 7-15) என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் வென்றது.