ADDED : மே 23, 2024 10:40 PM

சார்ஜா: சார்ஜா சாலஞ்சர் செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா சாம்பியன் ஆனார்.
சார்ஜாவில் சாலஞ்சர் செஸ் தொடர் நடந்தது. ஒன்பது சுற்று முடிவில் இந்தியாவின் திவ்யா, லேயா (ரஷ்யா), சினா (ஈரான்) தலா 7.0 புள்ளி பெற்றனர். வெற்றியாளரை முடிவு செய்ய 'டை-பிரேக்கர்' நடந்தது.
இதில் சிறப்பாக செயல்பட்ட திவ்யா (47 புள்ளி) வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். லேயா (45), சினா (41) அடுத்த இரு இடம் பிடித்தனர். இந்தியாவின் கார்த் ஆராத்யா (6.5), ஹர்ஷ் சுரேஷ் (6.5) 6, 7 வது இடம் பிடித்தனர்.
சர்வதேச தொடரில் 7 மாதத்துக்குப் பின் கோப்பை வென்ற திவ்யா கூறுகையில்,''கடினமான சார்ஜா தொடரில் கோப்பை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.
சார்ஜாவில் நடந்த மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி (6.0) 6 வது, அரவிந்த் சிதம்பரம் (5.5) 13 வது இடம் பிடித்தனர். ஈரானின் தானேஷ்வர் (6.5) கோப்பை வென்றார்.

