/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஷிவா தபா, சச்சின் அசத்தல்: தேசிய குத்துச்சண்டையில்
/
ஷிவா தபா, சச்சின் அசத்தல்: தேசிய குத்துச்சண்டையில்
ஷிவா தபா, சச்சின் அசத்தல்: தேசிய குத்துச்சண்டையில்
ஷிவா தபா, சச்சின் அசத்தல்: தேசிய குத்துச்சண்டையில்
ADDED : ஜன 12, 2025 11:02 PM

பரேலி: தேசிய குத்துச்சண்டை அரையிறுதிக்கு ஷிவா தபா, சச்சின் சிவாச் முன்னேறினர்.
உ.பி.,யின் பரேலியில், தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 8வது சீசன் நடக்கிறது. இதன் 60--65 கிலோ பிரிவு காலிறுதியில் அசாமின் ஷிவா தபா, மணிப்பூரின் ஹெந்தோய் மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' ஷிவா தபா வெற்றி பெற்றார். அரையிறுதியில் ஷிவா தபா, ஹிமாச்சல பிரதேசத்தின் அபினாஷை எதிர்கொள்கிறார்.
பின், 50-60 கிலோ பிரிவு காலிறுதியில் சர்வீசஸ் அணியின் சச்சின் சிவாச், ஹிமாச்சல பிரதேசத்தின் ஆஷிஸ் குமார் மோதினர். இதில் சச்சின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் சர்வீசஸ் அணியின் லக்சயா சகார், ஹிதேஷ், பவான், தீபக், விஷால், கவுரவ் சவுகான் வெற்றி பெற்றனர். இதன்மூலம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சர்வீசஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக கைப்பற்றும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது.