/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: அனிஷ் முதலிடம்
/
துப்பாக்கி சுடுதல்: அனிஷ் முதலிடம்
ADDED : மே 13, 2024 12:06 AM

போபால்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், அனிஷ் பன்வாலா முதலிடம் பிடித்தனர்.
மத்திய பிரதேசத்தின் போபாலில், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலுக்கான மூன்றாம் கட்ட தகுதிப்போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட்-பயர் பிஸ்டல்' பிரிவில் அனிஷ் பன்வாலா 36 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
ஏற்கனவே இவர், டில்லியில் நடந்த தகுதிப் போட்டியிலும் முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை விஜய்வீர் சித்து (31 புள்ளி), அன்குர் கோயல் (19) தட்டிச் சென்றனர்.
பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு பைனலில் 43 புள்ளிகளுடன் ஈஷா சிங் முதலிடத்தை கைப்பற்றினார்.
இவர், டில்லியில் நடந்த 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் முதலிடம் பிடித்திருந்தார். அடுத்த இரண்டு இடங்களை மனு பாகர் (40 புள்ளி), ரிதம் சங்வான் (33) பிடித்தனர். நான்காவது, ஐந்தாவது இடத்தை சிம்ரன்பிரீத் கவுர் பிரார், அபிந்தியா பாட்டீல் தட்டிச் சென்றனர்.