தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் சிப்ட் கவுர் * ஆசிய துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் சிப்ட் கவுர் * ஆசிய துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் சிப்ட் கவுர் * ஆசிய துப்பாக்கி சுடுதலில்


ADDED : ஆக 26, 2025 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிம்கென்ட்: கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா (589), ஆஷி சவுக்சே (586), அஞ்சும் மவுத்கில் (578) கூட்டணி, மொத்தம் 1753 புள்ளி எடுத்து முதலிடம் பெற, தங்கப் பதக்கம் கிடைத்தது.

அடுத்து நடந்த 8 பேர் பங்கேற்ற தனிநபர் பைனலில் சிப்ட் கவுர் சம்ரா, 459.2 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றினார். கடந்த 2024ல் இவர் வெள்ளி வென்றிருந்தார். ஆஷி (402.8) 7வது இடம் பெற்றார்.

50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் ஜூனியர் அணிகள் பிரிவில் இந்தியாவின் பிராச்சி (588), மஹித் (587), அனுஷ்கா (583) கூட்டணி தங்கம் (1758 புள்ளி) வென்றது. தனிநபர் பிரிவில் இந்தியாவின் அனுஷ்கா, 460.7 புள்ளியுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 'டிராப்' ஜூனியர் பைனலில் இந்திய வீரர் ஆர்யா வன்ஷ், கஜகஸ்தானின் நிகிடா, சம புள்ளி (40) பெற்று முதலிடம் பெற்றனர். அடுத்து நடந்த 'ஷூட் ஆப்பில்' சறுக்கிய ஆர்யாவுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

'டிராப்' ஜூனியர் பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் சபீரா, 39 புள்ளி எடுத்து தங்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஆத்யா (38) வெள்ளி வென்றார். 25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் இந்திய வீரர் சமீர் (21) வெண்கலம் வசப்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us