தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் பிராச்சி * ஆசிய துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் பிராச்சி * ஆசிய துப்பாக்கி சுடுதலில்

தங்கம் வென்றார் பிராச்சி * ஆசிய துப்பாக்கி சுடுதலில்


ADDED : பிப் 10, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 10:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பிராச்சி, ஜூனியர் பிரிவில் தங்கம் கைப்பற்றினார்.

டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச் சுற்று நடந்தது. இந்தியாவின் விதர்சா (590 புள்ளி) முதலிடம் பெற்றார். அஞ்சும் மவுத்கில் (587), ஆஷி சவுக்சி (586), ஆக்ரிதி (583), 3, 5, 7 வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர்.

இதையடுத்து அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் அஞ்சும், ஆஷி, ஆக்ரிதி இடம் பெற்ற அணி, மொத்தம் 1756 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றது.

அடுத்து நடந்த 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் தனிநபர் பைனலில், ஆக்ரிதி 354.2ப புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார். அஞ்சும் (340.4) வெண்கலம் கைப்பற்றினார். கஜகஸ்தானின் சோபியா (358.2) தங்கம் வென்றார்.

பிராச்சி அபாரம்

50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் ஜூனியர் பிரிவு போட்டி நடந்தது. இந்தியாவின் பிராச்சி, அனுஷ்கா, ஹசல் இடம் பெற்ற அணி, மொத்தம் 1748 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

தனிநபர் பிரிவில், இந்தியாவின் பிராச்சி (586), அனுஷ்கா (586), முதல் இரு இடம் பெற்றனர். தவிர, மெல்வினா (580), ஸ்ரீவள்ளி (577) 6, 7 வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினர்.

பைனலில் சிறப்பாக செயல்பட்ட பிராச்சி, 353.3 புள்ளியுடன் முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். அனுஷ்காவுக்கு (329.2) வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us