தங்கம் வென்றார் சேஜல் * உலக ஜூனியர் துப்பாக்கிசுடுதலில்
தங்கம் வென்றார் சேஜல் * உலக ஜூனியர் துப்பாக்கிசுடுதலில்
ADDED : ஜூன் 19, 2026 11:47 PM

சஹ்ல்: ஜெர்மனியில் ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தன. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஹிமான்சி (574 புள்ளி), சேஜல் (573), வன்ஷிகா (572) என மூவரும் 3, 4, 5வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினர்.
இதில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். 240.2 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்த 18 வயது வீராங்கனை சேஜல், தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பல்கேரியாவின் மரியா (235.8) வெள்ளி வென்றார். இந்தியாவின் ஹிமான்சிக்கு (217.6) வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் இந்தியாவின் பிராச்சி, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஒட்டுமொத்தமாக இந்தியா இதுவரை 2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா (தலா ஒரு தங்கம், வெள்ளி), சுவிட்சர்லாந்து (1 தங்கம், 1 வெண்கலம்), அடுத்த இரு இடத்தில் உள்ளன.
