/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கிசுடுதல்: ஆமிர் அசத்தல்
/
துப்பாக்கிசுடுதல்: ஆமிர் அசத்தல்
ADDED : மே 31, 2025 10:47 PM

சங்வான்: தென் கொரியாவில் உலக கோப்பை பாரா துப்பாக்கிசுடுதல் போட்டி நடக்கிறது. பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்குப் பின் நடக்கும், முதல் 'உலக' தொடரான இதில் 26 நாடுகளில் இருந்து 192 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
25 மீ., பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியா சார்பில் ஆமிர் அகமது பட், நிஹால் சிங் களமிறங்கினர். இதன் பைனலில் அசத்திய ஆமிர், 26 புள்ளியுடன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 24 புள்ளி எடுத்த நிஹால் வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால், 246.6 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. பாராலிம்பிக் சாம்பியன் அவனி லெஹரா (204.8) 4வது இடம் பிடித்தார்.
10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியாவின் மஹாவீர் (6வது), இஷாங்க் (8) பைனலில் ஏமாற்றினர்.