/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் ரைசா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
/
வெள்ளி வென்றார் ரைசா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
வெள்ளி வென்றார் ரைசா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
வெள்ளி வென்றார் ரைசா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்...
ADDED : மே 23, 2025 10:20 PM

சஹ்ல்: ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் நடக்கிறது. பெண்களுக்கான ஸ்கீட் பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரைசா தில்லான், 116 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.
அடுத்து நடந்த பைனலில் ரைசா, 51 புள்ளியுடன், இரண்டாவது இடம் பெற்று. வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். பிரிட்டனின் போபே (53) தங்கம், ஜெர்மனியின் அனபெல்லே (38) தங்கம், வெண்கலம் வென்றனர்.
அட்ரியன் அபாரம்
ஆண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் போட்டி தகுதிச்சுற்றில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர் (588) 4வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
பைனலில் பெரும்பாலான நேரத்தில் 4வது இடத்தில் இருந்த அட்ரியன், கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட, 446.6 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் வசப்படுத்தினார். இத்தொடரில் இவர் வென்ற இரண்டாவது பதக்கம்
இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நார்வே (2) அடுத்த இடத்தில் உள்ளது.