தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/துப்பாக்கிசுடுதல்: சோனம் 'வெள்ளி'

துப்பாக்கிசுடுதல்: சோனம் 'வெள்ளி'

துப்பாக்கிசுடுதல்: சோனம் 'வெள்ளி'


ADDED : அக் 15, 2024 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் சோனம் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்தியாவின் டில்லியில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் போட்டியில் இந்தியா சார்பில் சோனம் உத்தம் மஸ்கர் களமிறங்கினார். தகுதிச்சுற்றில் 632.1 புள்ளி எடுத்த இவர், பைனலுக்கு முன்னேறினார். இதில் 252.9 புள்ளி எடுத்த சோனம், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

ஒலிம்பிக், உலக சாம்பியன், சீனாவின் ஹூவாங், 254.5 புள்ளி எடுத்து, உலக சாதனை படைத்து, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். பிரான்சின் ஓசியானே, வெண்கலம் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீராங்கனை திலோத்தமா (167.7), 6வது இடம் பிடித்தார்.

பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பைனலில் இந்தியாவின் ரிதம் சங்வான், 4 வது, சுர்பி 5வது இடம் பிடித்து, பதக்க வாய்ப்பை இழந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us