தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியா மூன்றாவது இடம் * உலக துப்பாக்கிசுடுதலில்...

இந்தியா மூன்றாவது இடம் * உலக துப்பாக்கிசுடுதலில்...

இந்தியா மூன்றாவது இடம் * உலக துப்பாக்கிசுடுதலில்...


ADDED : ஏப் 22, 2025 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 11:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லிமா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பதக்க பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்தது.

பெருவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுர் பங்கேற்றார். இதில் இவர், வெண்கலம் கைப்பற்றினார்.

'டிராப்' பிரிவில் கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற பிரித்விராஜ் தொண்டைமான் (தமிழகம்), பிரகதி ஜோடி, இணைந்து 134 புள்ளி மட்டும் எடுக்க, 8வது இடம் பிடித்தது. மற்றொரு இந்திய ஜோடி லக்சய், நீரு ஜோடி 128 புள்ளியுடன் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டது. 'டாப்-4' இடம் பிடித்தால் மட்டும் பதக்க போட்டியில் பங்கேற்கலாம் என்ற நிலையில் இந்தியாவின் இரண்டு ஜோடியும் வெளியேறின.

ஒட்டுமொத்தமாக இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கம் வென்று, பதக்கப்பட்டியலில் 3வது இடம் பிடித்தது. சீனா (4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம்) முதலிடம் பெற்றது. அமெரிக்கா 7 பதக்கம் (4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்), தங்கம் அதிகமாக கைப்பற்றியதால், பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us