தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்திய ஜோடி புதிய சாதனை * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்...

இந்திய ஜோடி புதிய சாதனை * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்...

இந்திய ஜோடி புதிய சாதனை * உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்...


ADDED : ஏப் 07, 2026 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 11:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிரனடா: உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் உலக சாதனை படைத்து, தங்கம் வென்றது இந்தியாவின் பாலக்-முகேஷ் ஜோடி.

ஸ்பெயினின் கிரானடாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்'/'பிஸ்டல்') தொடர் நடக்கிறது. நேற்று 10 மீ., ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற பாலக்-ஜூனியர் உலக சாம்பியன் முகேஷ் ஜோடி, தகுதிச்சுற்றில் 581 புள்ளி எடுத்து, 2வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறியது.

இந்தியாவின் சைன்யம், உஜ்ஜவால் ஜோடி (576) 9வது இடம் பெற்று வெளியேறியது. பைனலில் இந்திய ஜோடி, தகுதிச்சுற்றில் முதலிடம் பெற்ற, நடப்பு உலக சாம்பியனாக களமிறங்கிய சீனாவின் குயான்ஜன், காய் ஹு ஜோடியை எதிர்கொண்டது.

இதில் இந்திய ஜோடி 487.7 புள்ளி எடுத்து புதிய உலக சாதனை படைத்து, தங்கம் வென்றது. தவிர, ஜூனியர் பிரிவிலும் இது உலக சாதனை ஆனது. சீனா (வெள்ளி), ஹங்கேரி (வெண்கலம்) அடுத்த இரு இடம் பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us