/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நிகிதாவுக்கு வெள்ளி: உலக ஜூனியர் மல்யுத்தத்தில்
/
நிகிதாவுக்கு வெள்ளி: உலக ஜூனியர் மல்யுத்தத்தில்
ADDED : செப் 07, 2024 11:48 PM

காலிசியா: உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் நிகிதா வெள்ளி வென்றார்.
ஸ்பெயினில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 62 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நிகிதா, உக்ரைனின் இரினா மோதினர். இதில் ஏமாற்றிய நிகிதா 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய ஜூனியர் (20 வயது) சாம்பியன்ஷிப் போட்டியில் நிகிதா தங்கம் வென்றிருந்தார்.
பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் நேஹா, ஹங்கேரியின் ஜெர்டா டெரெக் மோதினர். கடந்த மாதம் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நேஹா 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் என 5 பதக்கம் கிடைத்தது. ஜோதி பெர்வால் ('பிரீஸ்டைல்' 76 கிலோ) தங்கம் வென்றார். கோமல் ('பிரீஸ்டைல்' 59 கிலோ), சிருஷ்டி ('பிரீஸ்டைல்' 68 கிலோ) தலா ஒரு வெண்கலம் கைப்பற்றினர்.