/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சிமோன் பைல்ஸ் 'வெள்ளி': பாரிஸ் ஒலிம்பிக் நீச்சலில்
/
சிமோன் பைல்ஸ் 'வெள்ளி': பாரிஸ் ஒலிம்பிக் நீச்சலில்
சிமோன் பைல்ஸ் 'வெள்ளி': பாரிஸ் ஒலிம்பிக் நீச்சலில்
சிமோன் பைல்ஸ் 'வெள்ளி': பாரிஸ் ஒலிம்பிக் நீச்சலில்
ADDED : ஆக 05, 2024 10:34 PM

பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'புளோர்' பிரிவு பைனலில் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ், 14.133 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, ஒலிம்பிக் அரங்கில் சிமோன் பைல்ஸ் வென்ற 11வது பதக்கம் ஆனது. இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார். தவிர இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் இவரது 4வது பதக்கம் (3 தங்கம், ஒரு வெள்ளி) ஆனது. ஒலிம்பிக் அரங்கில் அதிக பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் வரிசையில் 2வது இடத்தை (தலா 11) செக்கோஸ்லோவாக்கியாவின் வெரா காஸ்லவ்ஸ்காவுடன் (7 தங்கம், 4 வெள்ளி) பகிர்ந்து கொண்டார் சிமோன் பைல்ஸ். முதலிடத்தில் சோவியன் யூனியனின் லாரிசா (9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம்) உள்ளார்.
பிரேசிலின் ரெபேகா, 14.166 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் மிகப் பெரிய தொடரின் 'புளோர்' பிரிவு பைனலில் சிமோன் பைல்சை வீழ்த்திய முதல் வீராங்கனையானார் ரெபேகா.
* 'பேலன்ஸ் பீம்' பிரிவு தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடித்த சிமோன் பைல்ஸ், பைனலில் கீழே விழுந்ததால் 5வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
நீச்சல்: அமெரிக்கா ஏமாற்றம்
பொதுவாக ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அமெரிக்க நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்துவர். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்கா ஏமாற்றியது. எட்டு தங்கம் மட்டுமே கைப்பற்றியது. இதற்கு முன், 1988ல் சியோலில் நடந்த ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அமெரிக்காவுக்கு 8 தங்கம் கிடைத்தது. அதன்பின் பங்கேற்ற அனைத்து ஒலிம்பிக்கிலும் இரட்டை இலக்கத்தில் தங்கம் வென்றிருந்தது.
* இம்முறை நீச்சலில் 35 தங்கம் வழங்கப்பட்டது. இதில் அமெரிக்கா (8), ஆஸ்திரேலியா (7) இணைந்து 15 தங்கம் வென்றன. பிரான்ஸ் (4), கனடா (3) உள்ளிட்ட 11 நாடுகள் இணைந்து 20 தங்கத்தை தட்டிச் சென்றன. இதற்கு முன் 1996ல் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் நீச்சலில் அமெரிக்கா (13), ஆஸ்திரேலியா (2) இணைந்து 15 தங்கம் வென்றன. மற்ற நாடுகள் இணைந்து 17 தங்கத்தை கைப்பற்றின.
இதன்மூலம் ஒலிம்பிக் நீச்சலில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் சரிய துவங்கியுள்ளது.