/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் சிம்ரன்: உலக 'பாரா' ஓட்டத்தில்
/
தங்கம் வென்றார் சிம்ரன்: உலக 'பாரா' ஓட்டத்தில்
ADDED : மே 25, 2024 10:55 PM

கொபே: உலக 'பாரா' தடகளத்தின் 200 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் தங்கம் வென்றார்.
ஜப்பானில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 200 மீ., 'டி12' ஓட்டத்தின் பைனலில் இலக்கை 24.95 வினாடியில் கடந்த இந்தியாவின் சிம்ரன் சர்மா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 6வது தங்கம். தவிர இவர், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதற்கு முன் 25.16 வினாடியில் இலக்கை அடைந்திருந்தார்.
இரண்டு 'வெண்கலம்'
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப்41' பிரிவு பைனலில் இந்தியாவின் நவ்தீப் (42.82 மீ.,) வெண்கலம் வென்றார்.
பெண்களுக்கான 100 மீ., 'டி35' ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை 14.43 வினாடியில் கடந்த இந்தியாவின் பிரீத்தி பால், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ரிங்கு 'வெள்ளி'
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் இந்தியாவின் ரிங்கு ஹூடா (62.77 மீ.,), அஜீத் சிங் (62.11 மீ.,) 3, 4வது இடம் பிடித்திருந்தனர். இரண்டாவது இடம் பிடித்த இலங்கையின் தினேஷ் பிரியந்தா ஹெராத் (64.59 மீ.,) இப்போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர் என இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததால், முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பின், இலங்கை வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ரிங்கு, அஜீத் சிங் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

