/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சிங்கப்பூர் ஸ்னுாக்கர்: அத்வானி சாம்பியன்
/
சிங்கப்பூர் ஸ்னுாக்கர்: அத்வானி சாம்பியன்
ADDED : அக் 06, 2024 10:24 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் ஸ்னுாக்கர் தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார்.
சிங்கப்பூரில், ஸ்னுாக்கர் ஓபன் தொடர் நடந்தது. இதன் காலிறுதியில் தாய்லாந்தின் டெசாவத் பூம்ஜேங்கை வீழ்த்திய இந்தியாவின் பங்கஜ் அத்வானி, அரையிறுதியில் சகவீரர் ஸ்ரீகிருஷ்ணா சூர்யநாராயணனை தோற்கடித்தார்.
அடுத்து நடந்த பைனலில் பங்கஜ் அத்வானி, சிங்கப்பூரின் ஜேடன் ஆங் மோதினர். துவக்கத்தில் இருந்து அபாரமாக ஆடிய அத்வானி 74-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
வரும் நவம்பரில் கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கவுள்ள உலக பில்லியர்ட்ஸ் தொடரில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் பங்கஜ் அத்வானி பங்கேற்கிறார்.