/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக ஸ்னுாக்கர்: சவுரவ் ஏமாற்றம்
/
உலக ஸ்னுாக்கர்: சவுரவ் ஏமாற்றம்
ADDED : நவ 05, 2024 11:34 PM

தோஹா: உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் காலிறுதியில் இந்திய வீரர் சவுரவ் கோத்தாரி தோல்வியடைந்தார்.
கத்தாரில் ஆண்களுக்கான உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் சவுரவ் கோத்தாரி, ஹுசைன் கான், கமால் சாவ்லா, பராஸ் குப்தா என நான்கு பேர் களமிறங்கினர். இதில் மற்றவர்கள் ஏமாற்ற, 'பி' பிரிவில் இடம் பெற்ற சவுரவ் கோத்தாரி, முதலிடம் பிடித்து 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறினார்.
இதில் இசல் ஆப் மெனின் டேரில் ஹில்லை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார். அடுத்து நடந்த காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-4' அந்தஸ்து பெற்ற சவுரவ், 12வது நிலை வீரரான ஈரானின் அலி கராகோஸ்லுவுடன் மோதினர். இப்போட்டியில் சவுரவ் 1-4 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

