தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகளம் * 29 ஆண்டுகளுக்குப் பின்...

சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகளம் * 29 ஆண்டுகளுக்குப் பின்...

சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகளம் * 29 ஆண்டுகளுக்குப் பின்...


ADDED : செப் 10, 2024 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்குகிறது.

29 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தான் ஏழு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான போட்டியை, தமிழக தடகள சங்கம் நடத்துகிறது.

இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 62 பேர், பாகிஸ்தான் - 12, இலங்கை - 54, பூடான் - 5, நேபாளம் - 9, வங்கதேசம் - 16, மாலத்தீவுகள் - 15 பேர் உட்பட மொத்தம் 210 வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் ஊரி மனோகர், ஹரிஹரன் கதிரவன், ஜிதின் அர்ஜுனன், ரவி பிரகாஷ், கார்த்திகேயன், அபிநயா ராஜராஜன், பிரதிக் ஷா யமுனா, லக் ஷன்யா, கனிஸ்டா டீனா உள்ளிட்ட ஒன்பது வீரர், வீராங்கனையர் இடம் பெற்றுள்ளனர். வரும் 13ம் தேதி வரை போட்டிகள் நடக்க உள்ளன. இன்று மாலை 5:00 மணிக்கு போட்டி துவங்குகிறது. இதை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்கிறார்.

'கேலோ இந்தியா' போட்டிக்காக, மறுசீரமைக்கப்பட்ட நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கில் போட்டி நடக்கிறது.

சென்னை வந்த பாகிஸ்தான் வீரர்கள்

சென்னை, பெரியமேடு, ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில், இன்று முதல் 13ம் தேதி வரை நடக்க உள்ள தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, இலங்கையிலிருந்து 65; பாகிஸ்தானில் இருந்து, 17; பூட்டானில் இருந்து 7; மாலத்தீவில் இருந்து 19 பேர் என, 149 பேர் நேற்று, சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் வரவேற்று, சென்னை எழும்பூரில் உள்ள விடுதியில் 59 அறைகளில் தங்க வைத்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, நபாள வீரர்களும் சென்னை வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us