sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

விளையாட்டுத் துறைக்கு அமோகம்: ரூ. 3,442 கோடி ஒதுக்கீடு

/

விளையாட்டுத் துறைக்கு அமோகம்: ரூ. 3,442 கோடி ஒதுக்கீடு

விளையாட்டுத் துறைக்கு அமோகம்: ரூ. 3,442 கோடி ஒதுக்கீடு

விளையாட்டுத் துறைக்கு அமோகம்: ரூ. 3,442 கோடி ஒதுக்கீடு

3


UPDATED : பிப் 01, 2024 11:07 PM

ADDED : பிப் 01, 2024 11:05 PM

Google News

UPDATED : பிப் 01, 2024 11:07 PM ADDED : பிப் 01, 2024 11:05 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டில்(2024-25) விளையாட்டுத் துறைக்கு 3,442.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் விளையாட்டுத் துறைக்கு ரூ. 3,442.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில்(ரூ. 3,396.96 கோடி) ஒதுக்கீடு செய்ததைவிட ரூ. 45.36 கோடி அதிகம். இந்த ஆண்டு நடக்க உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்.

* 'கேலோ' இந்தியா விளையாட்டுக்கு ரூ. 900 கோடி ஒதுக்கீடு.

* தேசிய அளவில் பயிற்சி முகாம் நடத்துவது, விளையாட்டு நட்சத்திரங்களுக்கு உபகரணங்கள் வழங்குவது, உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, பயிற்சியாளர்களை நியமனம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளும் தேசிய விளையாட்டு ஆணையத்துக்கு ரூ. 795.77 கோடி.

* தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்துக்கு ரூ. 21.73 கோடி. தேசிய ஊக்க மருந்து ஆய்வகத்துக்கு ரூ. 22 கோடி.

* தேசிய விளையாட்டு அறிவியல் ஆய்வு மையத்துக்கான நிதி ரூ. 10 கோடியில் இருந்து ரூ. 8 கோடியாக குறைப்பு.

* தேசிய விளையாட்டு பல்கலை.,க்கு 2023-24ல் ரூ. 83.21 கோடி ஒதுக்கீடு. இம்முறை ரூ. 91.90 கோடியாக அதிகரிப்பு.

* விளையாட்டு நட்சத்திரங்களுக்கான ஊக்கத் தொகை ரூ. 84 கோடியில் இருந்து ரூ. 39 கோடியாக குறைப்பு.

* தேசிய விளையாட்டு வளர்ச்சிக்கான நிதி ரூ. 46 கோடியில் இருந்து ரூ. 18 கோடியாக குறைப்பு.

* விளையாட்டு நட்சத்திரங்களுக்கான தேசிய நல நிதி திட்டத்திற்கு ரூ. 2 கோடி.

* ஜம்மு-காஷ்மீரில் விளையாட்டு வசதியை மேம்படுத்துவற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ. 20 கோடி ஒதுக்கீடு. இம்முறை ரூ. 8 கோடியாக குறைப்பு.

* காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ. 15.01 கோடி ஒதுக்கீடு. இது, ரூ. 0.01 கோடியாக குறைப்பு.

பி.டி.உஷா வரவேற்பு

பட்ஜெட் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா கூறுகையில்,''இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கும் சூழலில் விளையாட்டுத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. 'கேலோ' இந்தியா விளையாட்டு மூலம் அனைத்து நிலைகளில் இருந்தும் இளம் திறமைகளை கண்டறிய முடிகிறது,''என்றார்



பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,''சர்வதேச விளையாட்டில் நமது இளைஞர்கள் புதிய உச்சம் தொடுவதை எண்ணி நாடு பெருமை கொள்கிறது. ஆசிய விளையாட்டு, பாரா ஆசிய விளையாட்டில் அதிக பதக்கங்களை வென்றனர். 2023ல் நடந்த உலக கோப்பை செஸ் தொடரில், இந்தியாவின் 'நம்பர்-1' வீரரான பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சனுக்கு சவால் கொடுத்தார். 2010ல் 20 ஆக இருந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை, தற்போது 80 ஆக உயர்ந்துள்ளது,''என்றார்.








      Dinamalar
      Follow us