/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நிறைவேறியது விளையாட்டு மசோதா * சுதந்திரத்துக்குப் பின் சீர்திருத்தம்
/
நிறைவேறியது விளையாட்டு மசோதா * சுதந்திரத்துக்குப் பின் சீர்திருத்தம்
நிறைவேறியது விளையாட்டு மசோதா * சுதந்திரத்துக்குப் பின் சீர்திருத்தம்
நிறைவேறியது விளையாட்டு மசோதா * சுதந்திரத்துக்குப் பின் சீர்திருத்தம்
ADDED : ஆக 11, 2025 10:57 PM

புதுடில்லி: புதிய விளையாட்டு மசோதா நேற்று பார்லிமென்ட்டில் நிறைவேறியது.
இந்தியாவின் விளையாட்டு அமைப்புகளை கண்காணிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் புதிதாக தேசிய விளையாட்டு போர்டு (என்.எஸ்.பி.,) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா பார்லிமென்ட்டில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இதன் படி, தேசிய விளையாட்டு அமைப்புகளை (என்.எஸ்.எப்.எஸ்.,) ஒழுங்கு படுத்துதல், வெளிப்படையான, உலகத் தரம் வாய்ந்த நிர்வாகம், வீராங்கனைகளுக்கு நியாயமான வாய்ப்புகளை ஏற்படுத்துதல், மத்திய அரசிடம் நிதிபெறும் அனைத்து விளையாட்டு அமைப்புகளும் என்.எஸ்.பி.,யிடம் அனுமதி பெறுதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செயல்படுதல், விளையாட்டு அமைப்புகளில் முறையான தேர்தல் நடத்துதல், நிர்வாகிகளுக்கான வயது வரம்பு, முறைகேடு செய்யும் அமைப்புகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கட்டுப்படுத்தலாம்.
தவிர, வீரர், வீராங்கனைகள் குறித்த சர்ச்சைகளை தீர்க்க, நீதிமன்ற அளவிலான அதிகாரம் கொண்ட, புதிய விளையாட்டு தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும். இதில் கூறப்படும் தீர்ப்புகளை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தான் முறையிட முடியும்.
2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச போட்டிகளில் இந்திய நட்சத்திரங்களின் செயல்திறனை அதிகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
விதியில் திருத்தம்
தவிர, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டன.
இதனால், சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.,) வழிகாட்டுதல் படி, தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (என்.ஏ.டி.ஏ.,) விதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இனிமேல், என்.ஏ.டி.ஏ., அமைப்பு அதிக சுதந்திரத்துடன் செயல்படலாம்.
இந்த இரு மசோதாக்களும் நேற்று பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டன. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா கூறுகையில், ''சுதந்திர இந்தியாவில் விளையாட்டு அமைப்புகளில் செய்யப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. அனைத்து விளையாட்டு அமைப்புகளும் சிறந்த நிர்வாகம், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்குவதை இவை உறுதி செய்கின்றன,'' என்றார்.